என் #கல்விக்கென்ன #பதில் ???
என் கல்விக்கென்ன பதில் ??? ஆற்றங்கரையோரம்,மலையடிவாரம், கன்னுக்குகெட்டியவரை காணகமென குக்கிராமத்தில் வாழும் மாணவன் நிகழ்நிலை கல்வியமைப்பில் எவ்வாற பங்குபெறுவான் ? மடியில்வைக்க நல்ல உணவு தட்டு கூட இல்லாதவனுக்கு மடிக்கணினிக்க்கு எங்கு போவான்? ஜு மந்திரக்காளி போட்டால் ஜூமின் சீஸே திறந்திடுமா ? 4G,5G சமிக்ஞையும் சிக்காமல் சிட்டாய் பறக்கின்றதே ! நகரவாசி நிகழ்நிலை சூழ்நிலையில் பயனிக்க தொடங்கிவிட்டான் தொலைநிலை மாணவன் நிலையை யார் கேட்பது? கல்விக் கொள்கை 2020 இதை நோக்கி செயல்படுமா? தனியொருவனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழிதிடுவோம் என்று முரட்டு அன்பு பகிர்ந்தான் முண்டாசுக்கவி அன்று ! அடிப்படைக்கல்வியை அளிக்காத சமுக்கத்தை சாட்டையால் அடிப்போம் என்று சாடியிருப்பான் இன்று ! என் கல்விக்கென்ன பதில் தொலைதூரத்திலிருக்கும் கற்கமுயலும் மாணக்கனின கேள்விகனையிது !! -கெஜலட்சுமி விக்டரி லேர்னிங் அகாடமி