என் #கல்விக்கென்ன #பதில் ???
என் கல்விக்கென்ன பதில் ???
ஆற்றங்கரையோரம்,மலையடிவாரம், கன்னுக்குகெட்டியவரை
காணகமென குக்கிராமத்தில் வாழும் மாணவன் நிகழ்நிலை
கல்வியமைப்பில் எவ்வாற பங்குபெறுவான் ?
மடியில்வைக்க நல்ல உணவு தட்டு கூட இல்லாதவனுக்கு
மடிக்கணினிக்க்கு எங்கு போவான்?
ஜு மந்திரக்காளி போட்டால் ஜூமின் சீஸே திறந்திடுமா ?
4G,5G சமிக்ஞையும் சிக்காமல் சிட்டாய் பறக்கின்றதே !
நகரவாசி நிகழ்நிலை சூழ்நிலையில் பயனிக்க தொடங்கிவிட்டான்
தொலைநிலை மாணவன் நிலையை யார் கேட்பது?
கல்விக் கொள்கை 2020 இதை நோக்கி செயல்படுமா?
தனியொருவனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழிதிடுவோம்
என்று முரட்டு அன்பு பகிர்ந்தான் முண்டாசுக்கவி அன்று !
அடிப்படைக்கல்வியை அளிக்காத சமுக்கத்தை
சாட்டையால் அடிப்போம் என்று சாடியிருப்பான் இன்று !
என் கல்விக்கென்ன பதில் தொலைதூரத்திலிருக்கும்
கற்கமுயலும் மாணக்கனின கேள்விகனையிது !!
-கெஜலட்சுமி
விக்டரி லேர்னிங் அகாடமி
Comments
Post a Comment