Posts

Showing posts from October, 2021

#தொல்காப்பியம் ஒரு #பார்வை

# தொல்காப்பியம் ஒரு #பார்வை பெயரிலேயே காப்பியம் என்ற பெயரைப் பெற்ற ஒரே நூல் தொல்காப்பியம் !! இவ்வருமையான நூலை இலக்கண நூல் என்று சிலர்  தொடாமல்  இருக்கின்றோம்!!   தொலைநோக்கு பார்வையுடன் எதிர்கொண்டுள்ள அம்சங்கள்  அதில் எண்ணிலடங்காதவை எத்தனை  எத்தனை ?! வானவில் சாஸ்திரம் பற்றி என்ன ?மனோதத்துவ நிபுணம் பற்றி என்ன ? அறிவியல் விடயங்கள் மற்றும்  ஆய்வுகள் என்ன ? எழுதி  பல ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் ஒரு துளி  கூட ம௱ற்றத்திற்கு உட்படாமல்  உறுதியாக இலக்கண இலக்கியத்திற்கு தலைமை தாங்கி  கொண்டு இருக்கும் ஓரே நூல் நம்  தொல்காப்பியம் !!! இத்தனை பெருமை  படைத்த  இந்நூல் ஆசிரியரான  தொல்காப்பியருக்கு பல பதின்பெருக்கம் வணக்கங்கள்!!!

#காந்தி #ஜெயந்தி

உலக அகிம்சை தினமாக  கருதப்படும்  உயர்வான தந்தையாகிய காந்தியின்   பிறந்த நாளன்று   அவரைப் போற்றுவோம்!! போற்றும் அதே  நேரத்தில் வீட்டின்   நலனுக்காகவாவது " குடிமகன்கள்"  முதலில்   பாடுபட வேண்டும் என்று உணராலாமே !!! ஐந்து முறை உலக அமைதிக்கான நோபல் பரிசுக்காக பரிந்துரைக்கப்பட்ட தேசப்பிதாவை போலல்லாமல் குறைந்தது  ஒருமுறையாவது வீட்டுப்  பிரதிநிதி    குடும்ப அமைதிக்காக அடிஎடுத்து வைக்கலாமே !!! விடுமுறை நாட்களின் சிறப்பை  உணர்ந்து கொண்டாடுவோமே !!!