நானும் வானமும் (Me & Sky)

நானும்   வானமும்

நானும்  வானமும் பேசிக்கொண்டோம்...  பஞ்சபூதங்களில் ஒன்று அல்ல நீ பஞ்சபூதங்களையும்  அடக்கியவளா நீ என்றேன் நான் அவளை நோக்கி!

 ஏன் என்றால் அவள்?

 ஆம்  உன்னிடம் நீர் இருக்கிறது  கடலில் இருந்துதான்  எடுத்தாலும்  உன்னிடம் இருந்துதான்  எடுத்தது என்றேன் நான்!

 பிறகு என்றால் அவள்?

உன்னிடம் நிலமும் இருக்கிறது

 எப்படி என்றால் அவள்?

விண்வெளி நிலையம்(space station) விண்வெளி கைவினை(space craft)வா ன் கூண்டு (Aerostation) இருக்க அனுமதிக்கிறாயே  என்றேன் நான்!

ஆம்! பிறகு என்றால் அவள்?

 நெருப்பும் இருக்கிறதே என்றேன்  நான்?
சரிதான் என்றால் அவள்!
மின்னல் தான் அந்த நெருப்பு சரியா? என்றேன் நான்!

சரிதான் அடுத்தது கூறு  என்றால் அவள்!

வளிமண்டலத்தின் ஒரு பகுதியையும்   (exolayer) கொண்டிருக்கிறாயே என்றேன் நான்?

சரி சரி #SpaceX (#Elon Musk) ம் #Blue Origin(#Jeff Bezos) ம் மிகுதியாக என்னை தேடிக்கொண்டிருக்கிறார்கள் என்று  சட்டென்று  ஆகாயகங்கை   மறைந்துவிட்டாள்?!!

 

Comments

Post a Comment

Popular posts from this blog

Build your Own Life😍

Why is #Santa 🤶🧑‍🎄🤶always in🌺 Red?